spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்!

திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்!

-

- Advertisement -

திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்!

திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி மாரடைப்பால் காலமானார்.

we-r-hiring

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி, இன்று காலமானார். அவருக்கு வயது74. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. பொன்னுசாமி, 2001, 2006 மற்றும் 2021 ஆண்டுகளில் சேந்தமங்கலம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எற்கனவே இரண்டு முறை பொன்னுசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 3வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பொன்னுசாமி, தனது ஆரம்பகாலத்தில் அதிமுகவில் இருந்தே அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் திமுகவில் இணைந்து, கடந்த 2016ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

பின்னர் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொன்னுசாமியின் மறைவால், தற்போது சேந்தமங்கலம் தொகுதி காலியாகியுள்ளது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், சேந்தமங்கலத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இல்லை என தகவல்கள் கூறுகின்றன.

MUST READ