
நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க காரணமே இளைஞரணி தான் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’…. ரிலீஸ் எப்போது தெரியுமா?
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநில மாநாடு நடைபெற்று வரும் நிலையில், மாநாடு வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்து, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில், “தி.மு.க. இளைஞரணி என்ற ஒன்றை உருவாக்க கலைஞரும், பேராசிரியரும் நினைத்தார்கள். கடந்த 1980- ஆம் ஆண்டு ஜூலை 20- ஆம் தேதி மதுரை மாவட்டம், ஜான்சிராணி பூங்காவில் தி.மு.க. இளைஞரணி மாநாடு தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே ஓர் அரசியல் கட்சியில் இளைஞரணி தொடங்கப்பட்டது அதுவே முதல்முறை.
இளைஞரணிக்கு சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு கடந்த 1981- ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் ஒப்பதல் பெறப்பட்டது. தி.மு.க. இயக்கத்துக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞரணி தான் அடித்தளம் அமைத்தது. நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க காரணமே இளைஞரணி தான். என்னை உழைக்க வைத்து உற்சாகமூட்டியது இளைஞரணியினர் தான்.
ஓடிடியில் வேட்டையாட தயாராகும் ‘அனிமல்’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஆற்றல் மிக்க இளைஞர்கள் என்னை சுற்றி இருப்பதால் தான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். ஏராளமான தளபதிகளை உருவாக்கிய, உருவாக்குகிற ஈடு இணையற்ற அணிதான் இளைஞரணி. இன்றைக்கு இளைஞரணியை வழிநடத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிடைத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.