spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது

டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது

-

- Advertisement -

டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது

டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

RBI makes big announcement regarding Rs 2,000 currency notes

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும், ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

கடந்த 2018-2019 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. கிளீன் நோட் பாலிசி அடிப்படையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடாது என ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

tasmac

இந்நிலையில் எக்காரணத்தை கொண்டு இன்று முதல் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது என கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மதுப்பிரியர்கள் தொந்தரவு செய்தால் வங்கியில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்த வேண்டுமென கூறியுள்ளது. ரூ.2,000 நோட்டுகளை வாங்கினால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளார் மற்றும் விற்பனையாளர் பொறுப்பில் தீர்வு காண வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

MUST READ