spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சியில் ஒன்றிய அரசின் விரோத குற்றவியல் சட்டங்களை கண்டித்து துரை வைகோ பேரணி

திருச்சியில் ஒன்றிய அரசின் விரோத குற்றவியல் சட்டங்களை கண்டித்து துரை வைகோ பேரணி

-

- Advertisement -

ஒன்றிய அரசின் விரோத குற்றவியல் சட்டங்களை கண்டித்து மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ எம்.பி தலைமையில் சார்பில் பேரணி நடைபெற்றது.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஒன்றிய அரசின் மூன்று மக்கள் விரோத குற்றவியல் சட்டங்களை கண்டித்து திருச்சியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றேன்..!இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மாநில அரசின் உரிமைகளை பாதிக்கின்ற வகையிலும், நீதித்துறை செயல்பாட்டிற்கு ஊறு விளைவிக்கின்ற வகையிலும், காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி இந்தி சமஸ்கிருத மொழித்திணிப்பை ஊக்குவிக்கின்ற மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், மக்கள் விரோத சட்டங்களை நீக்க வலியுறுத்தியும் வழக்கறிஞர்களின் JAAC அமைப்பு திருச்சியில் 08.07.2024 அன்று கண்டனப் பேரணி நடத்தியது. ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டனப் பேரணியில் நான் கலந்து கொண்டேன்.

இந்நிகழ்வில், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் திருச்சி மாநகர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ் மாணிக்கம், கன்னியாகுமரி மாவட்ட செயலாளரும் உயர்நிலைக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் எஸ்.வெற்றிவேல், பகுதி செயலாளர்கள் ஆடிட்டர் வினோத், ஆசிரியர் முருகன், செல்லத்துரை, மாவட்ட துணை செயலாளர் புஷ்பா சுப்பிரமணி, மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் அரசு அமல்ராஜ், சிவகங்கை நகர செயலாளர் வழக்கறிஞர் தீபன் சக்கரவர்த்தி, வழக்கறிஞர் சத்தியகுமாரன், எஃப்.எஸ்.ஜெயசீலன், இளைஞர் அணி தினேஷ், அரியமங்கலம் வெ.அடைக்கலம், டோமினிக், வட்ட செயலாளர் சாதிக், தொண்டரணி விக்கி, இணையதள பொறுப்பாளர் தென்னூர் ராஜா உள்ளிட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் என்னுடன் பங்கேற்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ