spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"மின் இணைப்பு பெயரை மாற்ற சிறப்பு முகாம்"- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!

“மின் இணைப்பு பெயரை மாற்ற சிறப்பு முகாம்”- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"மின்மாற்றிக் கொள்முதலில் முறைகேடுகள் இல்லை"- தமிழக அரசு விளக்கம்!
Photo: TNEB

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம் முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புத்தாரர்களுக்கான ‘சிறப்பு பெயர் மாற்றம் முகாம்’ வரும் ஜூலை 24- ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

கொலை, பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 92 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!

இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகைத் தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்வாரிய அலுவலகங்கள் செயல்படும்.

பொதுமக்கள் முகாமைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களது வீட்டின் மின்இணைப்பு பெயரை மாற்றுவதற்கு ரூபாய் 726- ஐ கட்டணமாக செலுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

தமிழகத்தில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

விண்ணப்பத்தாரர்கள் தங்களின் ஆதார் அட்டையின் நகல், மாநகராட்சிக்கு சமீபத்தில் செலுத்திய வீட்டு வரி ரசீது, வீட்டுப் பத்திரத்தின் நகல் ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மின் இணைப்பு பெயரை மாற்றிக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ