Homeசெய்திகள்தமிழ்நாடு"பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு உயர வேண்டும்"- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

“பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு உயர வேண்டும்”- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

-

 

"பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு உயர வேண்டும்"- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

குடும்பங்கள் ரசிக்கும் வெப் சீரிஸ்….. சேரனின் ‘ஜர்னி’ அப்டேட்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் செமி கண்டெக்டர், மேம்பட்ட உற்பத்திக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன், குவால்காம் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், “நாட்டில் பணிபுரியும் பெண்களில் 43% தமிழ்நாட்டில் உள்ளனர்; நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு உயர வேண்டும் என விரும்புகிறேன். 500 ஆண்டு போராட்டங்களுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுகிறது.

மூத்த இயக்குனருடன் புதிய படத்தில் இணையும் மோகன்லால்!

காலனி ஆதிக்க மனநிலை மாற வேண்டும்; பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒற்றுமையே இலக்காக இருக்க வேண்டும்; 140 கோடி மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் உழைப்பு பிரதிபலிக்காதது துரதிர்ஷ்டவசமானது. ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காக வைத்திருப்பது துணிச்சலான முடிவு. கலாச்சாரம், வரலாற்றில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நீங்கள் வந்திருக்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

MUST READ