இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இயல்பான கதைகளை எடுத்துக்கொண்டு அதை அனைத்து மக்களும் தங்கள் வாழ்க்கையோடு பொருந்தி பார்க்கும் படியான திரைக்கதை அமைத்து தரமான திரைப்படங்களை படைப்பவர். தற்போது பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லைவ் நிறுவனத்திற்காக புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் சரத்குமார், கலையரசன், பிரசன்னா, ஆரி, திவ்யபாரதி ஆகியோர் நடித்துள்ளனர். விவசாயம் தொடர்பான ஒரு எபிசோடு இடம்பெற்றுள்ளதாகவும் அந்த எபிசோடு மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும் ஊடக நண்பர்கள் இடையே பேச்சு நிலவி வருகிறது.
அதே சமயம் ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்கள் என்றாலே கெட்ட வார்த்தைகள் நிறைந்து காணப்படும். சமீபத்தில் வெளியான லேபில் வெப் தொடரிலும் கூட அதிக கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் சேரன் இயக்கியுள்ள ஜர்னி வெப் தொடரில் அது போன்ற எந்தவித கெட்ட வார்த்தையும் இடம் பெறவில்லையாம். இந்த வெப் தொடரை ஒப்பந்தம் செய்யும்போதே தன்னுடைய படங்களைப் போல இந்த வெப் தொடரும் குடும்பங்கள் பார்க்கும் விதமாக தான் இயக்குவேன் என்று ஸ்ரிக்டாக கூறிவிட்டாராம் சேரன். ஆகையால் இந்த ஜர்னி வெப் தொடர் நல்ல கதையம்சமும் கருத்துக்களும் உடையதாக ரசிகர்களை ரசிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஜர்னி வெப்சீரிஷின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த வெப் சீரிஸ் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.