சேலம் சிறுவாச்சூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.


நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தை பிறந்தால் அதிமுகவுக்கு வழி பிறந்து விட்டது. கிராமம் மேம்பாட்டுக்கு வளர்ச்சிக்காக எந்த திட்டமும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீரசபதம் ஏற்போம். கந்துஞ்சாது களப்பணி ஆற்றி மீண்டும் அதிமுகவின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்குவோம். தலைவாசல் கால்நடைப் பூங்கா அருகில் தோல் தொழிற்சாலை திட்டம் ஏதேனும் இருந்தால் கைவிட்டு விட வேண்டும்.
விவசாய பணி என்பது சாதாரண பணி கிடையாது கடுமையான பணி, ரத்தத்தை வேர்வையாக மண்ணில் சிந்து உழைப்பவர்கள் விவசாயிகள். அவர்களுக்காக எந்த திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வரவில்லை. நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் விளங்கி கொண்டிருக்கின்றனர். வேளாண் தொழில் மட்டுமே மக்களுக்கு உணவளிக்கும். விவசாயிகள்தான் நாட்டிற்கே உணவளித்து வருகின்றனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்து சிறுவாச்சூர் ஏரி திட்டம் நிறைவேற்றப்படும். குடிமராமத்து திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிய அரசு அதிமுக. விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது அதிமுகதான். மாவுப்பூச்சி, அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்டதை காப்பாற்றிய அரசு அதிமுக அரசு. பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட அதிமுக அரசு பரிசுத்தொகுப்புடன் ரூ.2,500 வழங்கப்பட்டது. அதிமுகவின் தொடர் வற்புறுத்தலை அடுத்துதான் பொங்கல் தொகுப்பில் விடியா திமுக அரசு கரும்பு வழங்கியது. விவசாயிகளை புறக்கணிக்கும் நடவடிக்கைகளிலேயே விடியா அரசு ஈடுபட்டுவருகிறது.” எனக் கூறினார்.
