
பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான் மற்றும் வளையாறு மனோஜ் ஆகியோரிடம் ரூபாய் 1.10 கோடி மனநஷ்ட ஈடுகேட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் சாட்சியம் அளிக்க இயலாது எனவும், எனது வீட்டில் சாட்சியத்தைப் பதிவுச் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் கோரி எடப்பாடி பழனிசாமி மனு செய்திருந்தார். அந்த மனுவில், பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக, உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வரும் போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருந்தார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!
ஆனால் இதற்கு பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இரு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தும், வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும் உத்தரவிட்டார்.
ஒரு மாதத்திற்குள் சாட்சியங்களைப் பதிவுச் செய்து, அதனை அறிக்கையாக டிசம்பர் 15- ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.