Homeசெய்திகள்தமிழ்நாடுகொச்சி சென்ற விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு... சென்னையில் அவசரமாக தரையிறக்கம்!

கொச்சி சென்ற விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு… சென்னையில் அவசரமாக தரையிறக்கம்!

-

- Advertisement -

சென்னையில் இருந்து 147 பயணிகளுடன் கொச்சிக்கு புறப்பட்ட ஸ்பைஜெட் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல் 

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.30 மணி அளவில் கேரள மாநிலம் கொச்சி செல்லும் ஸ்பை ஜெட் விமானம், 147 பயணிகள் உள்ளிட்ட 155 பேருடன் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டுபிடித்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பினார்.

அப்போது, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை உடனடியாக சென்னைக்கே திருப்பிக் கொண்டு வந்து தரையிறக்கும்படி உத்தரவு பிறப்பித்தனர்.அதன்படி இந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 7.15 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு,  பொறியாளர்கள் குழுவினர் இயந்திர கோளாறை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால்,  147 பயணிகள் 8 விமான ஊழியர்கள் உட்பட 155 பேர் நல்வாய்ப்பாக உயிர்த் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக சென்னை விமான நிலையத்தில், இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ