Homeசெய்திகள்தமிழ்நாடுபொறியியல்  பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

பொறியியல்  பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

-

முதல்சுற்றில் 30,264 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 26,654 மாணவர்கள், 7.5% இட ஒதுக்கீட்டில் 1,343 மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவில் 2,267 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பொறியியல்  பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறதுஅரசு பள்ளி மாணவர்கள் பொது பிரிவிலும் 7.5 சதவீதம் என இரண்டு லிங்க்கையும் பயன்படுத்தி சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும். 433 கல்லூரிகளில் உள்ள  1,79, 938 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது.

மே மாதம் 6ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 12ம் தேதி வரை விண்ணப்பப்பதிவு நடைபெற்றது. அதில் மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10 ந் தேதி  வெளியிட்டப்பட்டது.

சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 836 மாணவர்கள் இறுதி ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுள்ளனர்.

இன்று தரவரிசை எண் 1 முதல் 26,654 வரை மாணவர்கள் பொதுப்பிரிவில் கலந்துகொள்ளவுள்ளனர்.  அதேபோல் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து 7.5%  இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் 1,343 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கட்-ஆஃப் மதிப்பெண் 200-179.00 வரை 2,267 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களும் இன்று கலந்துகொள்கின்றனர்.

காலை 10 மணி முதல் விருப்பக் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம். Www.tneaonline.org என்ற தளத்தில் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

MUST READ