ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலி காரணமாக கடந்த 15ம் தேதி போரூர் தனியார் மருத்துவமனையில் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இளங்கோவன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.
அங்கு அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அண்மையில் அவர், கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையது.
இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நலமாக இருப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.