Homeசெய்திகள்தமிழ்நாடு"பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல": சென்னை மகளிர் கருத்தரங்கில் நடிகை ரேவதி உருக்கம்!

“பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல”: சென்னை மகளிர் கருத்தரங்கில் நடிகை ரேவதி உருக்கம்!

-

- Advertisement -

ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் ‘பாரத் சோகா கக்காய்’ அறக்கட்டளை சார்பில் 6-வது மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது. பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற இந்த விழாவில் பிரபல நடிகை ரேவதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்."பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல": சென்னை மகளிர் கருத்தரங்கில் நடிகை ரேவதி உருக்கம்!

பல தலைமுறைகளாகத் தொடரும் போராட்டம்
நிகழ்வில் நடிகை ரேவதி பேசியதாவது, “கல்வி, வேலைவாய்ப்பு, வாக்குரிமை மற்றும் சொத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளில் தங்களது குரல் உரக்கக் கேட்கப்பட வேண்டும் என்பதற்காகப் பெண்கள் பல தலைமுறைகளாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சுயமரியாதை மற்றும் சமத்துவத்திற்காகக் குரல் கொடுப்பது என்பது வெறும் எதிர்ப்பைக் காட்டுவதற்காகச் செய்யப்படும் செயல் அல்ல; அது சமூகத்தின் மிக அவசியமான தேவையாகும்.

we-r-hiring

இன்று விளையாட்டு, அறிவியல், கலை மற்றும் பொது வாழ்க்கை என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். முன்பு நுழைய முடியாத துறைகளில் கூட இன்று பெண்கள் தடம் பதித்துத் தங்களை உயர்த்தி வருவதைக் காண முடிகிறது.”

"பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல": சென்னை மகளிர் கருத்தரங்கில் நடிகை ரேவதி உருக்கம்!

பாதுகாப்பு அச்சமும் குடும்ப வன்முறையும்
“பெண்களின் இந்த முன்னேற்றத்திற்கு இடையே சில கவலைக்குரிய விஷயங்களும் நீடிக்கவே செய்கின்றன. இதனால்தான் பல தசாப்தங்களாக, பல நூற்றாண்டுகளாகப் பெண்களின் உரிமை குறித்து நாம் திரும்பத் திரும்பப் பேச வேண்டிய சூழல் உள்ளது. பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் இன்றளவும் நிலவுகிறது. இது குறித்து தினந்தோறும் செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் படிக்கிறோம்.

முன்பெல்லாம் இதுபோன்ற சம்பவங்களைக் கேள்விப்பட்டதில்லையே என நாம் நினைக்கலாம். அதற்கு காரணம் அக்காலத்தில் இதுகுறித்த புகார்கள் பதிவாகாததும், பேசப்படாமல் மறைக்கப்பட்டதுமே ஆகும். மேலும், கல்வியறிவும் பொருளாதாரச் சுதந்திரமும் பெற்ற பெண்கள் வாழும் குடும்பங்களில் கூட இன்றளவும் குடும்ப வன்முறை நிலவுவது வேதனையளிக்கிறது,” என்று தெரிவித்தார்.

"பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல": சென்னை மகளிர் கருத்தரங்கில் நடிகை ரேவதி உருக்கம்!

ஆண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு அவசியம்
மேலும் தொடர்ந்த அவர், “மாற்றம் என்பது மக்களின் மனரீதியிலும் பார்வையிலும்தான் தொடங்க வேண்டும். பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதைத் தந்தை, சகோதரன், மகன் என வீட்டிலுள்ள குழந்தைகள் உற்றுநோக்குகிறார்கள். எனவே, மாற்றத்திற்கான விதை குடும்பத்திலிருந்தே தொடங்க வேண்டும்.

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல; அது ஆண்களை விடப் பெண்களை உயர்வாகக் கருதுவதோ அல்லது ஆண்களை வெறுப்பதோ கிடையாது. பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் பாதுகாப்பு மிக அவசியம். பெண்களின் முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வு குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருப்பதை விட, ஆண்களுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் சிறுவயதிலிருந்தே பெண்களை மதிப்பதைப் பற்றியும், பெண் பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று அழுத்தமாகக் கூறினார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை, வார விடுமுறை மற்றும் ஊதிய உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு!

MUST READ