Homeசெய்திகள்தமிழ்நாடுமும்பையிலிருந்து இலங்கைக்குக் கடத்தத் திட்டம்: சிப்காட் போலீசார் அதிரடி

மும்பையிலிருந்து இலங்கைக்குக் கடத்தத் திட்டம்: சிப்காட் போலீசார் அதிரடி

-

- Advertisement -

ஓசூர் அருகே ₹6 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்: ஆம்னி பேருந்தில் கடத்திய நபர் கைது!
தமிழக–கர்நாடக எல்லையான ஓசூர் அருகே, தனியார் ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட சுமார் ₹6 கோடி மதிப்பிலான 6 கிலோ ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருளைப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்துள்ளனர்.மும்பையிலிருந்து இலங்கைக்குக் கடத்தத் திட்டம்: சிப்காட் போலீசார் அதிரடி

ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தணிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் நேற்று இரவு தமிழக–கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

we-r-hiring

அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்திப் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர்.

6 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
அந்தச் சோதனையின் போது, பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு (32) என்பவரின் உடமைகளைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அதில் ‘எம்.டி.எம்.ஏ’ (MDMA) எனப்படும் தடை செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் 6 பண்டல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சர்வதேச சந்தையில் சுமார் ₹6 கோடி மதிப்பிலான 6 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ரகுவைக் கைது செய்தனர்.

இலங்கைக்குக் கடத்த முயற்சி
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த போதைப்பொருள் மும்பையிலிருந்து பெங்களூரு வழியாக உடுமலைப்பேட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, ரகுவிடம் விசாரணை நடத்திய சிப்காட் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். மேலும், இந்தக் கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார் என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!

MUST READ