spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்..

we-r-hiring

இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரை முற்றுகையிட்ட மக்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஆகஸ்ட் 21- ஆம் தேதி மட்டும் ஒன்பது தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல்கள் மீனவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது.

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடல் ரீதியிலாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதோடு, மீனவர்களிடம் இருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இது மீனவர்கள் மீதான தாக்குதலின் தீவிரத்தை உணர்த்துகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்…. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்!

இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பகுதியைச் சார்ந்துள்ளது. தொடர்ச்சியான வன்முறை செயல்கள் அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குவதுடன் அவர்களின் குடும்பங்களையும், சமூகங்களையும் பாதிக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்புக் கொண்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

MUST READ