spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்.... தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்…. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்!

-

- Advertisement -

 

kkssr ramachandran assembly

we-r-hiring

சொத்துக்குவிப்பு விவகாரத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கும் உயர்நீதிமன்றம், இன்று (ஆகஸ்ட் 23) விசாரணை நடத்தவுள்ளது.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம்!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை அமைச்சர்களாக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவுச் செய்திருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், இரு அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டது. இந்த வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்திருக்கிறார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 23) காலை 11.00 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் பரப்புரைத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!

ஏற்கனவே, அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துள்ளார் என்பதும், இந்த வழக்குகள் அனைத்தும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ