Homeசெய்திகள்தமிழ்நாடுமீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்வு:தமிழக அரசு உத்தரவு...

மீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்வு:தமிழக அரசு உத்தரவு !!!

-

மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு மீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் 60 வயதை  கடந்தவர்களுக்கும் மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு ,பால்வளம் ,மீன்வளம் ,மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசாணை :மீன்பிடி தடை காலத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்ட கடலோர குடும்பங்களுக்கு 5 ஆயிரம் நிவாரணத்தொகையாக வழங்கி வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ,கடந்த 18 ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் 2023-24 ஆம் ஆண்டிற்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்துள்ள தகுதியான 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறாத மீனவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும், என்று அறிவிப்பினை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து மீனவ குடும்பங்களுக்கு 5 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் அத்தொகையினை உயர்த்தி வழங்கக்கோரி பல்வேறு மீனவ சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று 18.8.2023 அன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் 2024-25 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 5ஆயிரத்தில் இருந்து 8ஆயிரமாக உயர்த்தி வழங்கபடும் என அறிவித்தார்.இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

MUST READ