
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் 80% மின்விநியோகம் சீரானதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா…. இரட்டைக் குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு!
இது குறித்து மின்சார வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், “பள்ளிக்கரணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்னும் 20% மின்விநியோகம் செய்யப்பட வேண்டும். பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் 80% மின்விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வடசென்னையில் எம்.கே.பி.நகர் உள்ளிட்டப் பகுதிகளுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் பாதுகாப்புக் கருதியே மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாக்கத்தில் ஒரு சில பகுதிகளிலும், புளியந்தோப்பு குக்ஸ் சாலையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்…. 200 குடும்பங்களுக்கு பண உதவி செய்த KPY பாலா!
இதனிடையே, புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் பேருந்து போக்குவரத்து இன்று (டிச.07) மீண்டும் இயல்புக்கு திரும்பி வருகிறது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மிதமான வேகத்தில் மாநகர பேருந்துகள் இயக்க ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.