Homeசெய்திகள்தமிழ்நாடுவெள்ள நீரில் இறங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

வெள்ள நீரில் இறங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

-

- Advertisement -

 

வெள்ள நீரில் இறங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக, கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நீரில் இறங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுச் செய்து வருகிறார்.

வைகுண்ட ஏகாதசி : திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்..

சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் தூத்துக்குடிச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுச் செய்தார். பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

“உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்”- என்.ஆர்.இளங்கோ பேட்டி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், கனிமொழி எம்.பி. மற்றும் அதிகாரிகளும் ஆய்வுச் செய்து வருகின்றனர். அரிசி, வேட்டி, சேலை, பாய், பிஸ்கட், பிரட் உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர், குறிஞ்சி நகர் பகுதியில் வெள்ள நீரில் இறங்கி ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

MUST READ