சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 53 ஆயிரத்து 280-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமுடன் காணப்பட்ட வந்த நி லையில், நேற்று சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.53 ஆயிரத்து 440-க்கு விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் சரிந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து சவரன் ரூ.53 ஆயிரத்து 280-க்கு வர்த்தகமாகிறது. இதேபோல், தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 660க்கு விற்பனையாகிறது.
இதேபோல், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் வரை குறைந்து, கிராம் 91 ரூபாய் 70-காசுகளுக்கும், பார் வெள்ளி கிலோவுக்கு 300 ரூபாய் வரை சரிந்து கிலோ 91 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது.