பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி 15%லிருந்து 6% குறைந்ததை அடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றைய தங்கம் விலையானது சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,810-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி 15%லிருந்து 6% குறைந்ததை அடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை ஒரு சவரன் ரூ,54.480-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலையானது தற்போது சவரனுக்கு ரூ.2080 குறைந்து ஒரு சவரன் 52,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 260 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.