
தங்கம் விலை தினந்தோறும் உச்சம் தொட்டு வருவதால் தங்க நகைப்பிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் உயர்ந்து உச்சத்தைத் தொடும் என்று தங்க நகைக்கடைகள் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகி ரோஹித் சர்மா முடிவு?
இன்று (ஏப்ரல் 04) காலை 09.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து ரூபாய் 52,360- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து ரூபாய் 6,545-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 84- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி!
கடந்த 10 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 2,000 வரையும், வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 4 வரையும் உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல்- ஹமாஸ் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.