spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - இன்றும் குறைந்தது தங்கம் விலை!

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – இன்றும் குறைந்தது தங்கம் விலை!

-

- Advertisement -

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏறி, இறங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த புதன் கிழமை சென்னையில் ஒரு சவரன் தங்கம் 40 ரூபாய் குறைந்து 47,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதேபோல் வியாழக்கிழமை சவரனுக்கு அதிரடியா 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேபோல் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 46,880 ரூபாய்க்கு விற்பப்பட்டது. தங்கம் விலை குறைந்து வருவதை போல கடந்த சில நாட்களாக வெள்ளி விலையும் குறைந்து வருகிறது.

we-r-hiring

gold price

இந்த நிலையில், தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் குறைந்துள்ளது. அதன்படி சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.

MUST READ