spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை - இல்லத்தரசிகள் கவலை!

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை!

-

- Advertisement -

தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்று கிழமையான நேற்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

MUST READ