தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளதால் தங்க நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘மக்களவைத் தேர்தல் 2024’- கரூர் தொகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குபவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. இன்று (ஏப்ரல் 01) காலை 09.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 680 உயர்ந்து ரூபாய் 51,640- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 85 உயர்ந்து ரூபாய் 6,455- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 81.60- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என்று தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.