spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!

-

- Advertisement -

 

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!
Video Crop Image

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முகப்பு வாசலில், ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ரவுடி கருக்கா வினோத்தைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அத்துடன், அவரிடம் இருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

we-r-hiring

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி விழா…. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!

பின்னர், கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி கருக்கா வினோத்திடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தான் சிறையில் இருந்து வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் ஆளுநர் மாளிகை முகப்பு வாசலில் பெட்ரோல் குண்டு வீசியதாக காவல்துறையினரிடம், ரவுடி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகை சுற்றிலும் காவல்துறையினர், பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!

ரவுடி கருக்கா வினோத் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ