spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் குற்றச்சாட்டும்....முதலமைச்சர் பதிலடியும்...!

ஆளுநர் குற்றச்சாட்டும்….முதலமைச்சர் பதிலடியும்…!

-

- Advertisement -

 

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குற்றம்சாட்டிய நிலையில், நடிப்புச் சுதேசிகளை நாடறியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

மருது சகோதரர்களின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசு அமையும் போதெல்லாம், விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றார்களின் வரலாற்றை தேசத்தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும் என்றும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

இது போன்ற கோட்சே கூட்டத்தைத் தான் மகாகவி பாரதியார் நடிப்புச் சுதேசிகள் என பாடியதாகவும், முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“சங்கரய்யாவின் டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் தேவை”- அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!

திருச்சியில் நடைபெற்ற மருது சகோதரர்களின் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் திட்டமிட்டே மறைத்து விட்டார்கள் என குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிக்கை அமைந்துள்ளது.

MUST READ