Homeசெய்திகள்தமிழ்நாடு"அரசு ஊழியர்களிடம் ஆதரவுக் கேட்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!"

“அரசு ஊழியர்களிடம் ஆதரவுக் கேட்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!”

-

 

"அரசு ஊழியர்களிடம் ஆதரவுக் கேட்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!"

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கோரி தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வருகிற 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

அந்த அறிக்கையில், “இந்தியா கூட்டணி அரசு அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். உங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் அச்சுப்பிசகாமல் நிறைவேற்றித் தருவேன் என்ற உறுதியை அவர்களை நேரில் அழைத்துச் சொல்லியிருக்கிறேன். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழ்நாட்டின் நிதிநிலை விரைவில் சீராகும் போது எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும் என்று உறுதியளிக்கிறேன்.

திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனது இருக்கிறது. மார்க்கமும் விரைவில் வரும். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட நமது இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

“எங்கள் ஆட்சியா இருண்ட காலம்?”- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!

அரசு ஊழியர்களின் போராட்டத்தை எள்ளி நகையாடியதோடு, கஜானாவைச் சுரண்டிச் சென்ற கடந்தகால ஆட்சியாளர்களின் செயல் காரணமாக, சில வாக்குறுதிகள் தாமதாகி இருக்கிறதே ஒழிய, அவை நிராகரிக்கப்படவில்லை! சொன்னதைச் செய்வோம்! கலைஞரின் வழியில் அரசு ஊழியர்களின் காவலனாகத் தொடர்வோம்!” என்று உறுதியளித்துள்ளார்.

MUST READ