Homeசெய்திகள்தமிழ்நாடுஆசிரியர்களை மிரட்டுவதா? அமைச்சர் கீர்த்தனாவின் செயலை ஏற்க முடியாது: பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர்...

ஆசிரியர்களை மிரட்டுவதா? அமைச்சர் கீர்த்தனாவின் செயலை ஏற்க முடியாது: பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் குமரேசன் காட்டம்!

-

- Advertisement -

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு (TET) நடத்தும் முறையில் அரசு நடந்துகொண்ட விதம் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நடந்துகொண்ட விதம் ஆகியவற்றுக்குத் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ​புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் குமரேசன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தற்போதைய மன உளைச்சல் குறித்துப் பரபரப்புக் கருத்துகளை வெளியிட்டார்.
அமைச்சர்

ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம்: “சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு”
​பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்ட விதம் வேதனைக்குரியது என்று குறிப்பிட்ட குமரேசன் பேசியதாவது:
​”தேர்வு எழுத வந்த ஆசிரியர்களை வரிசையில் நிற்க வைத்துக் கொச்சைப்படுத்தியுள்ளனர். ஒரு சில இடங்களில் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றியவர்கள், ஆசிரியர்களை மிரட்டும் தொனியில் நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது.
​2008 ஆகஸ்ட் 24 அன்றுதான் கல்வி உரிமைச் சட்டச் சுற்றறிக்கை வெளியானது. ஆனால், அதற்கு முன்பே பணியில் சேர்ந்து 20, 25 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் பலர் உள்ளனர்.

we-r-hiring

அவர்களுக்கு எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் தேர்வைத் திணிப்பது, ஆசிரியர்களைப் பெருமளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இது ஒட்டுமொத்தக் கற்றல், கற்பித்தல் பணியையே பின்தங்கச் செய்யும்.”
​மேலும், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்வு எழுதத் தேவையில்லை என்று பல நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சமூக நீதியை எந்த இடத்திலும் பரிசீலிக்காமல் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இது சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு என்றும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இது தொடர்பாகத் தனித் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசை வலியுறுத்தி ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் கீர்த்தனாவுக்குக் கண்டனம்
​அரசுப் பள்ளி மாணவர்களிடம் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நடந்துகொண்ட விதம் குறித்துப் பேசிய குமரேசன்:
​”அனுபவம் இல்லாத இளம் அமைச்சர் என்ற நோக்கத்தில், சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் எனத் தெரியாமல் பல வேலைகளைச் செய்து வருகிறார். மாணவர்களின் உளவியலைப் புரிந்து கொள்ளாமல் அமைச்சர் செயல்பட்டதை எங்களால் ஏற்க முடியாது.
​வகுப்பறைக்குள் 20, 30 பேர் கூட்டமாகச் சென்று வீடியோ எடுத்ததை எங்கள் சங்கம் வன்மையாக மறுக்கிறது; இதற்குப் மிகப்பெரிய அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அந்தந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள், தங்கள் துறைகளை மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என்று முதலமைச்சரே தெரிவித்துள்ளார்.” என்றார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்குப் பதில்
​இவ்விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் விளக்கமும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று சாடிய குமரேசன், “நடந்த தவறைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள முடியாமல், சமாளிப்பதற்காகவே கல்வி அமைச்சர் பேசி வருகிறார். எதிர்காலத்தில் இதுபோன்று வகுப்பறைகளுக்குள் அத்துமீறல்கள் நடக்கக் கூடாது. அப்படி மீறி நடந்தால், எங்கள் சங்கத்தின் செயல்பாடு மற்றும் போராட்டம் வேற மாதிரியாக இருக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

MUST READ