Homeசெய்திகள்தமிழ்நாடுமாநில தேர்தல் ஆணையரை ராஜினாமா செய்ய தவெக அரசு அழுத்தம்? - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...

மாநில தேர்தல் ஆணையரை ராஜினாமா செய்ய தவெக அரசு அழுத்தம்? – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்! ​

-

- Advertisement -

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து பி. ஜோதி நிர்மலா சாமியை ராஜினாமா செய்ய வைக்குமாறு தவெக அரசு தரப்பில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அரசியல் மற்றும் அதிகாரி வட்டாரங்களில் தகவல்கள் கூறப்படுகின்றன.​ ​மாநில தேர்தல் ஆணையரை ராஜினாமா செய்ய தவெக அரசு அழுத்தம்? - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்!  ​

கடந்த திமுக ஆட்சி காலத்தில், 2024 மார்ச் 12 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி. ஜோதி நிர்மலா சாமி நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை என அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போதைய நிலையில் அவரது பதவிக்காலம் இன்னும் எஞ்சியிருக்கும் சூழலில், புதிய அரசு அவரைப் பதவியில் இருந்து விலகுமாறு நிர்பந்திப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முந்தைய ஆட்சி மாற்றங்களின் போது, உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் மாநில தேர்தல் ஆணையர் போன்ற முக்கியப் பதவிகளில் நியமிக்கப்படும் அதிகாரிகள், தங்களின் முழுப் பதவிக்காலமும் முடியும் வரை அதே பொறுப்பில் நீடிப்பதே வழக்கமான நடைமுறையாக இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போதைய தவெக அரசு அமைந்த பிறகு, முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல்வேறு வாரியங்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், மாநில தேர்தல் ஆணையருக்கும் இத்தகைய அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

we-r-hiring

மாநில தேர்தல் ஆணையர் பதவி என்பது சாதாரண வாரியப் பதவி போலல்லாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் (Constitutional Body) தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு உயர் பொறுப்பாகும். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்குப் பின்பற்றப்படும் அதே கடுமையான நடைமுறைகள் மூலமே மாநில தேர்தல் ஆணையரையும் நீக்க முடியும் என்ற சட்டப் பாதுகாப்பு இதற்கு உண்டு. ​இருப்பினும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, புதிய தேர்தல் ஆணையரை நியமிக்கும் நோக்கில் இந்த ராஜினாமா அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், தற்போதைய ஆணையர் ஜோதி நிர்மலா சாமி, தான் தொடங்கி வைத்துள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் வார்டு மறுவரையறைப் பணிகளை முழுமையாக முடிப்பதிலேயே ஆர்வம் காட்டி வருவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்குத் தனி நிதி இல்லை! ஒன்றிய அரசின் புதிய உத்தரவால் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முடங்கும் அபாயம்

MUST READ