HomeBreaking Newsஆட்சிக்கவிழ்ப்பு யூகத்திற்கு இடமில்லை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆட்சிக்கவிழ்ப்பு யூகத்திற்கு இடமில்லை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆட்சிக்கவிழ்ப்பு யூகத்திற்கு இடமில்லை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!​இந்த வழக்கின் இறுதி விவாதத்தின் போது நீதிமன்றத்தில் இருதரப்பிலும் முன்வைக்கப்பட்ட காரசாரமான வாதங்கள் வருமாறு,

​சதித் திட்டம் என்பது வெறும் யூகம் – செந்தில் பாலாஜி தரப்பு
​செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தனது வாதத்தில், “குதிரை பேரம் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் எதுவும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகே இந்த அரசியல் உள்நோக்கம் கொண்ட புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசை கவிழ்க்கச் சதி நடந்ததாகக் கூறப்படுவது முற்றிலும் யூகத்தின் அடிப்படையிலானது. சட்டமன்ற சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் மட்டும் ஒரு அரசை கவிழ்த்துவிட முடியாது. சபாநாயகருக்கு அனைத்துக் கட்சியினரும் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர். தற்போது எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

we-r-hiring

​அசோக்குமார் தான் இதற்குத் தூண்டுகோலாக இருந்தார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், புகார்தாரர் திருநாவுக்கரசு ஈரோட்டில் இருந்த நாளில், அசோக்குமாரும் அங்கு இருந்தார் என்பதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் இருவரும் நேரில் சந்தித்தார்களா இல்லையா என்பதைக்கூட காவல்துறை தரப்பில் வழக்கில் தெளிவாகச் சொல்லவில்லை. கரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், செந்தில் பாலாஜி கட்சிக்காகப் பணியாற்றுவதைத் தடுப்பதற்காகவே இந்த வழக்கு திட்டமிட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தப் பணப் பரிமாற்றமும் இங்கு நடக்கவில்லை. மக்கள் பிரதிநிதியாக இருக்கும் செந்தில் பாலாஜி, காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறார்” என்று வாதிட்டார்.

​பழி வாங்கும் நடவடிக்கை – அசோக்குமார் தரப்பு
​அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமரேசன், “எப்போதெல்லாம் அண்ணன் செந்தில் பாலாஜி மீது அரசியல் ரீதியாக வழக்குப்பதிவு செய்யப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவரது சகோதரர் அசோக்குமாரையும் தேவையின்றி வழக்கில் சேர்த்து விடுகின்றனர். ஏற்கனவே ஒரு செய்தியாளர் இது சம்பந்தமாகப் பேசியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது, ஆனால் அதுகுறித்து எந்தவொரு முறையான புகாரும் அளிக்கப்படவில்லை. ​சட்டமன்றத்தில் ஏற்கனவே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு, தற்போது 108 உறுப்பினர்கள் ஆதரவுடன் அரசு நிலையாக உள்ளது. இந்தச் சூழலில் மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோர முடியாது. ரூ.35 கோடி குதிரை பேரம் என்பது வெறும் கற்பனையான யூகம் மட்டுமே. சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது” என வாதிட்டார்.

ஆட்சிக்கவிழ்ப்பு யூகத்திற்கு இடமில்லை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

​ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்துள்ளது – காவல்துறை கடும் எதிர்ப்பு
​காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் வாதிடுகையில், “இந்த வழக்கின் விசாரணை தற்போதுதான் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இந்த சதித் திட்டம் தொடர்பாகக் கைது செய்யப்படுபவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்கான மனு அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த குற்றச்சதியை அரங்கேற்றியுள்ளனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளன. ​குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சென்னை ஈசிஆர் (ECR) மற்றும் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்று கூடியதற்கான சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் தொலைபேசி தொடர்பு ஆதாரங்கள் எங்களிடம் சிக்கியுள்ளன. அசோக்குமார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்த இடத்திற்கு 40-க்கும் மேற்பட்ட முறை வந்து சென்றுள்ளார். இந்த சதியின் பின்னணியில் ஹவாலா பணப் பரிமாற்றமும் நடந்துள்ளது. தற்போதைய அரசைச் சீர்குலைக்க இவர்கள் திட்டமிட்டு முயற்சி செய்துள்ளனர்” என வாதிட்டார்.

​நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
​இருதரப்பு வழக்கறிஞர்களின் நீண்ட மற்றும் விரிவான வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, காவல்துறையின் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய வலுவான முகாந்திரம் இல்லாததைக் கருத்தில் கொண்டும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் – உயர்நீதிமன்றம் அதிரடி!

MUST READ