
வரும் நவம்பர் 01- ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

“என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராமச் சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி, வரும் நவம்பர் 01- ஆம் தேதி காலை 11.00 மணியளவில் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதிச் செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!
கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஏதுவாக, கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள தமிழக அரசு, கிராம சபைக் கூட்டங்களை மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி மூலம் உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


