பொதுமக்கள் பார்வைக்கான டோக்கன்களைப் பெற நீண்ட வரிசையில் காத்திருந்த ஆர்வலர்கள்!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தினமும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அனல் பறக்கும் காரசார விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாகப் காண்பதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் பெருமளவில் அதிகரித்துள்ளது.

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளைப் பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரவைக் கூட்டத் தொடரின் விவாதங்களைக் காண்பதற்காக இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தனர்.
பேரவைக் கூடத்திற்குள் செல்வதற்கான பார்வையாளர் நுழைவுச் சீட்டு (Token) வழங்கும் மையத்தின் முன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன்களைப் பெற்றுச் சென்றனர்.
அதிகரிக்கும் ஆர்வம்
சமீப நாட்களாகச் சட்டமன்றத்தில் பல்வேறு மக்கள் நலச் சட்டமுன்வடிவுகள், கேள்வி நேர விவாதங்கள் மற்றும் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான பதிலடிகள் மிகுந்த விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் நேரலையாகப் பார்த்த நிலை மாறி, சட்டமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க விவாதங்களை நேரில் கண்டு ரசிக்கும் நோக்கில், நாள்தோறும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக தலைமைச் செயலகப் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், நுழைவு வாயில்களில் தீவிர சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலில் தவெகவினருக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி விமர்சனம்!
