Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழை எச்சரிக்கை - பி.எட். கலந்தாய்வு ஒத்திவைப்பு

கனமழை எச்சரிக்கை – பி.எட். கலந்தாய்வு ஒத்திவைப்பு

-

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை நடைபெற இருந்த பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கல்லூரி கல்வி ஆணையர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் நாளை நடைபெற இருந்த பி.எட் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஒத்திவைக்கப்பட்ட பி.எட் கலந்தாய்வு வரும் அக்டோபர் 21ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ