Homeசெய்திகள்தமிழ்நாடு6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்... வானிலை மையம் எச்சரிக்கை!

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை!

-

செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் கால்வாய்க்குள் விழுந்த இளைஞரால் பரபரப்பு

மேலும் வரும் தேதி 11ஆம் தேதி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஆகஸ்ட் 12ஆம் தேதி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

MUST READ