
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுதளத்தில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் விமானங்களின் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க வேண்டிய 32 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன.

அம்பத்தூரில் கடன் பெற்று ART நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த டிரைவர் தற்கொலை
இதையடுத்து, சென்னை விமான நிலையம் இன்று முழுவதும் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, மழை வெள்ளம் சூழ்ந்துள்ள சென்னையில் ஆம்புலன்ஸ் செல்வதற்கான வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை- KMC: பல்லவன் பாயிண்ட், அண்ணாசாலை, எழும்பூர்,சேத்துப்பட்டு, EVR சாலை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை: டவர் கிளாக் அண்ணாசாலை, பல்லவன் இல்லம்- சென்ட்ரல்- EVR சாலை வழியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லும்.
27 செ.மீ மழை ,ஆவடியில் வீசிய மிக்ஜாம் புயல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 24 நிவாரண முகாம்களில் 200 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் இருப்பவர்களுக்கு உணவு, குடிநீர், உடைகள் உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன.
தொடரும் கனமழை குறித்து தனியார் வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், “2015- ஆம் ஆண்டு பிறகு தற்போது தான் சென்னையில் அதிகளவில் மழை பெய்துள்ளது. கடல் சீற்றம் குறைந்தால் மட்டுமே ஆறுகள், கால்வாய் வெள்ளம் கடலுக்கு செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.