spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!

பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!

-

- Advertisement -

 

"பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ஏன்?"- அமைச்சர் பொன்முடி விளக்கம்!
Photo: Minister Ponmudy

அமைச்சராகப் பதவியேற்கவுள்ள பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

we-r-hiring

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மார்ச் 22) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், தமிழ்நாடு அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுக் கொள்கிறார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் எண்ணம் தனக்கு இல்லை என தமிழக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் பதிலை அடுத்து பொன்முடி பதவிப் பிரமாணத்திற்காக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானது!

மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதற்கு எதிரான வழக்கு பின்னர் பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

MUST READ