Homeசெய்திகள்தமிழ்நாடுஉச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

-

 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

பொன்முடி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பணிந்தார்.

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டதால் தி.மு.க.வைச் சேர்ந்த பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இதையடுத்து, பொன்முடிக்கு அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அதனை ஏற்க ஆளுநர் மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. அத்துடன், ஒரு நாளுக்குள் முடிவெடுக்கத் தவறினால் கடும் உத்தரவுப் பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கெடு விதித்திருந்தது.

இந்த சூழலில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பணிந்தார். தமிழக அமைச்சராகப் பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இன்று (மார்ச் 22) பிற்பகல் 03.30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவியேற்றுக் கொள்கிறார். பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானது!

பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், உயர்கல்வித்துறையைக் கூடுதலாகக் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ