
மயிலாடுதுறையில் உள்ள இலவச மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக தருமபுரம் ஆதீனம் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் சிறப்பு இனிப்புகள் விற்பனை!
இது தொடர்பாக தருமபுரம் ஆதீனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “மயிலாடுதுறை மகப்பேறு மருத்துவமனை திருக்கயிலாய பராமரிப்பு தருமையாதீன 24ஆவது குருமணிகள் தம் தாயார் நினைவாக மகப்பேறு மருத்துவமனை கவர்னரால் தொடங்கப்பெற்று 25ஆவது குருமணிகள் காலத்தில் மாநில முதல்வர் குமாரசாமிராஜாவால் திறந்து வைக்கப் பெற்றது. இதில் ஜெர்மனிய மருத்துவர் பல்லாண்டுகாலம் இருந்து பலருக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப் பெற்றது.
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறை சோதனை!
இதை நாம் ஆதீன பராமரிப்பில் நடத்த நகராட்சிக்கு எழுதியும், பதில்வராத பொழுதே அதை இடிக்கபோவதாக செய்தி வந்துக் கொண்டுள்ளது அப்படியொரு நிகழ்வு ஏற்படுமாயின் நம்முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம்!!” என்று குறிப்பிட்டுள்ளார்.


