
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் உள்ள பழமையான வீட்டின் மேற்கூரை அதிகாலை 04.00 மணியளவில் இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி, இரண்டு சிறுமிகள், சிறுமிகளின் தாய் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வீட்டின் மேற்கூரை பட்டாசு வெடித்தது போன்று சத்தம் கேட்டதால் அக்கம், பக்கத்தினர் யாரும் வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்காத சோக நிலையால் நான்கு பேரில் உயிர் பறிபோகியுள்ளது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது, இடிபாடுகளில் சிக்கியிருந்த நான்கு பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விரைவில் தொடங்குகிறதா கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?
அத்துடன், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.