Homeசெய்திகள்சினிமாகயல் ஆனந்தி நடிக்கும் 'மங்கை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -
கயல் ஆனந்தி நடிக்கும் 'மங்கை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
File Photo

சினிமாவில் இன்று பல நடிகைகள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் திரிஷா, நயன்தாரா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகை கயல் ஆனந்தியும் இணைந்துள்ளார். கடந்த 2014 இல் வெளியான கயல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் கயல் ஆனந்தி. இவர் சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றார். மேலும் இவர் ஒயிட் ரோஸ் எனும் சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார். இப்படத்தில் ஆர் கே சுரேஷ் வில்லனாக நடிக்க ராஜசேகரன் இதனை எழுதி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் குபேந்திரன் காமாட்சி இயக்கி வரும் மங்கை எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜே எஸ் எம் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஸ்டார் என்பவரின் ஒளிப்பதிவிலும் டீசல் என்பவரின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெற்றிமாறன், அமீர், விஜய் சேதுபதி ஆகிய மூவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.கயல் ஆனந்தி நடிக்கும் 'மங்கை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அந்த போஸ்டரில் மங்கை  TRAVEL OF WOMEN என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பெண்களை தவறான எண்ணத்தில் பார்ப்பவர்கள் இருக்கும் சமூகத்தில் பெண்கள் எப்படி பயணிக்கிறார்கள் என்பது சம்பந்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இப்படம் விரைவில் வெளியாக  இருக்கின்றன.

MUST READ