Homeசெய்திகள்தமிழ்நாடுகனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்?- ஐகோர்ட்

கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்?- ஐகோர்ட்

-

கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்?- ஐகோர்ட்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்காமல் அக்டோபர் 11 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Highcourt

சிதம்பரம், நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழாவை ஒட்டி, கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோவில் தீட்சிதர்கள் பதாகை வைத்தனர். அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்னை எழுந்தது. இந்நிலையில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022ம் ஆண்டு மே 17ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஏழு முதல் பத்து பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோவிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கனகசபையில் யாரும் ஏறக்கூடாது.. போர்டை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன் சிதம்பரம்  தீட்சிதர்கள் வாக்குவாதம் | Chidambaram nataraja temple Dikshitars  surrounded the ...

தமிழக அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும், கோவிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், அரசாணை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காப புர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதில் எந்த வகையில் மனுதாருக்கு பாதிப்பு? உங்களுக்கு வழக்கு தொடர என்ன தகுதி? நீங்கள் தீட்சிதரா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை அக்டோபர் 11ம் தேதி ஒத்திவைத்தனர்.

 

MUST READ