கர்ப்பிணி மனைவியை வயிற்றில் ஓங்கி உதைத்த கணவர்! அதன்பின் நடந்த ட்விஸ்ட்
மயிலாடுதுறையில் கர்ப்பிணியின் வயிற்றில் ஓங்கி உதைத்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த ஐந்து மாத கர்ப்பிணி பெண் மாடிப்படியில் வந்துகொண்டிருந்தபோது ஒரு இளைஞர் அவரிடம் சண்டை இட்டு வயிற்றில் ஓங்கி மிதித்துள்ளார். வலியால் அலறி துடித்த பெண்மணி கீழே விழுந்து கதறி அழுதார். மயக்க நிலைக்குச் சென்ற அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓங்கி மிதித்த வாலிபர், வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை சமாதானம் என்ற பெயரில் மருத்துவமனை வளாகத்தில் பொது இடத்தில் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொஞ்சி குலாவி சமாதானமாகிக் கொண்டிருந்தார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் பாதுகாப்பு பெண்கள் தட்டி கேட்டனர். சில மணி நேரங்களுக்கு முன்பு வலியால் துடித்த பெண்மணி ஆவேசமாக நீங்கள் உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்கள்… எங்களுக்கு தெரியும் என்று அந்தர் பல்டி அடித்து வாலிபருக்கு ஆதரவாக பாதுகாப்பில் இருந்தவர்களிடம் சண்டைக்குச் சென்றார்.
அடித்த வாலிபர் பெயர் விஜய் என்பதும் அந்தப் பெண்மணியின் பெயர் சுபா என்பதும் சீர்காழி தென்பாதியைச் சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்ம்று மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்தனர். இதனிடையே கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைக்கும் வீடியோ வாட்ஸ்அப்பீல் பரவி வருகிறது.