தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோர பகுiதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காராணமாக பருவமழை தீவிரமடைந்து கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் இன்று முதல் நாளை மறுநாள் ( 24ம் தேதி) வரை தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பாகுதிகாலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அத்துடன் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி , திண்டுக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அத்துடன் வருகிற 26ம் தேதி ( நவம்பர்) தெற்கு அவ்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் , அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நவம்பர் 27ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.