
சென்னையில் திராவிடப் போராளி அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச 01) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூபாய் 2.49 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், ஆ. ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், ரவிகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொஹிதீன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மருத்துவர் செல்வராஜ் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.