Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!

இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!

-

 

இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
File Photo

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற 38வது அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது- திரெளபதி முர்மு

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் அவரது பேச்சு அமைந்திருக்கிறது.

அரசமைப்பு சட்டத்தின் அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படுவதே ஒன்றிய அரசின் திட்டம் என்பது உள்துறை அமைச்சரின் பேச்சில் வெளிப்படுகின்றது.

அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு தொடர்ந்து இயங்கி வருவது கண்டனத்துக்குரியது.

இந்தியா என்பது ஓர் ஒற்றை தேசிய நாடு அல்ல, பல்வேறு இனங்களின் கூட்டுத்தொகுப்பு. அந்தப் பல்வேறு இனங்களில் தனித்துவம் என்பது மொழி அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது.அனைத்து மொழிகளுக்கும் இடையில் சமத்துவம் நிலவுவதுதான் விடுதலையின் அடையாளம்.

இந்தியாவில் 22 மொழிகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. 22 மொழிகளும் எட்டாவது அட்டவணையில் அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.அந்தந்த மாநில மொழிகள் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக வேண்டும் .மொழிகளுக்கு இடையில் சமத்துவம் இருந்தால்தான் மொழி பேசும் மக்களுக்கு இடையில் சமத்துவம் இருக்கும்.

“இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள்”- எடப்பாடி பழனிசாமி ட்வீட்!

ஒரு மொழியை திணித்தால் எந்த மொழி திணிக்கப்படுகிறதோ அந்த மொழிக்கு உரியவர்கள்தான் எல்லா நிலையிலும் ஆதிக்கத்தில் வருவார்கள்.இந்தி திணிப்பு என்பது வெறும் மொழியினை பற்றிய செய்தி அல்ல. நம்முடைய சந்தை பறிபோகும், நம்முடைய வேலைவாய்ப்பு பறிபோகும், தொழில் வளர்ச்சி பறிபோகும். ஒற்றுமையுடன் வாழும் மக்களை மொழியின் அடிப்படையில் பிரிக்கும் உத்தியை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ