spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள்"- எடப்பாடி பழனிசாமி ட்வீட்!

“இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள்”- எடப்பாடி பழனிசாமி ட்வீட்!

-

- Advertisement -

 

"ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
File Photo

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், அன்புக் குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள்.

we-r-hiring

ஆப்ரேஷன் செய்து குழந்தையை கொன்றுவிட்டனர்- தாய் பேட்டி

மேலும் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அக்குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்பினையும் வழங்க வேண்டுமென வலியுறுத்ததுகிறேன்.

மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது- திரெளபதி முர்மு

அலட்சியம் அக்கறையின்மைக்கு உதாரணமாக இருக்கும் இந்த விடியா ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பதையும், மக்களை காக்கும் கடமையில் இருந்து இந்த அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதையும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிருபணம் செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ