spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்!

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்!

-

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிரிதுள் வரும் நவம்பர் 21ஆம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். இதனால் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை, மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் அண்மையில் பரிந்துரைத்து இருந்தது. இதனை ஏற்று டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பதவி உயர்வில் மாற்றம் செய்யப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக குறைந்து, காலியிடங்கள் 9ஆக அதிகரிக்கிறது.

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி

கடந்த 1963ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தாராபுரத்தில் பிறந்த நீதிபதி டி.கிருஷ்ண குமார், சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும் படித்துள்ளார். கடந்த 1987ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கிய டி.கிருஷ்ணகுமார் மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016ஆம் ஆண்டு டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டார்.

MUST READ