- Advertisement -
தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடாவாக க.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், கோவி. செழியன் புதிய அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் புதிய தலைமை கொறடாவாக முன்னாள் அமைச்சர் க.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னுர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள க.ராமச்சந்திரன், தமிழக அமைச்சரவையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு தமிழ்நாடு அரசின் புதிய தலைமை கொறடாவாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.