Homeசெய்திகள்தமிழ்நாடுகச்சத்தீவு விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

கச்சத்தீவு விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

-

 

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏப்ரல் 21- ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கச்சத்தீவு விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மீது பகிரங்கமாக குரோதம் சாட்டி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

‘மக்களவைத் தேர்தல் 2024’- கரூர் தொகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்!

இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்? பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே…பதில் சொல்லுங்க மோடி” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ